தேசிய செய்திகள்

குடோனில் தீ விபத்து: சிறுமிகள் உள்பட 4 பேர் கருகி சாவு

ராஜஸ்தானின் நீம்ரானா பகுதியில் ஒரு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் பணிபுரிந்த டிரவைர் ஒருவர் பீடி குடித்துவிட்டு தீக்குச்சியை வீசியதால் தீ விபத்து ஏற்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் நீம்ரானா பகுதியில் ஒரு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய வாசனை திரவிய பாட்டில்களில் இருந்து வெளியேறிய எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தின் மீது, குடோனில் பணிபுரிந்த டிரவைர் ஒருவர் பீடி குடித்துவிட்டு தீக்குச்சியை வீசினார். அப்போது அந்த திரவத்தின் மீது பட்டு தீ பிடித்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பரவி மளமளவென குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் அங்கு பணிபுரிந்த 15 வயது மற்றும் 7 வயது சிறுமிகள் உள்பட 4 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 தீயணைப்பு வாகனங்களை கொண்டு 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.