கொல்கத்தா,
294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
152 தொகுதிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 152 தொகுதிகளில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. முதற்கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 89.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்காளத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் கட்சி ஆதரவாளர்களிடயே மோதல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 2-ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 91.58 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.