தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள மொத்த நீதிபதிகளின் நியமனம் 37 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டிற்கு ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் வெங்கிட சுப்பிரமணிய மோகனா, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மத்திய பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் நீதிபதி அருண் பல்லி ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை காலை வெளியிட்டது.

புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை வைத்து இருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு சட்ட அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.