தேசிய செய்திகள்

விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னையில் அவசரமாக தரை இறங்கியது

சென்னை,

ஐதராபாத்தில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு 192 பயணிகள், 6 ஊழியர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப் போது விமான கழிவறை கண்ணாடியில், 'டிஷ்யூ' பேப்பரில் 'பிற்பகல் 1.50 மணிக்கு வெடிக்கும்' என எழுதப்பட்ட மிரட்டல் குறிப்பு ஒட்டப்பட்டிருந்ததை ஊழியர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விமானி கொடுத்த அவசர தகவலின் பேரில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பகல் 12.58 மணிக்கு விமானம் அவசரமாக தரை யிறக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட 'ரிமோட் பே' பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டு, பயணி கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததாலும், பிற்பகல் 2.30 மணி வரை அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத தாலும் மிரட்டல் வெறும் புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT