இண்டிகோ 
தேசிய செய்திகள்

சவுதி அரேபியாவுக்கான விமான சேவை அக்.31-ந்தேதி வரை ரத்து; இண்டிகோ அறிவிப்பு

ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளும் அக். 27 வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

சவுதி அரேபியாவின் ரியாத்துக்கான விமான சேவையை வருகிற அக்.31-ந்தேதி வரை இண்டிகோ தற்காலிக ரத்து செய்து உள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடுமையான தாக்குதலால் மேற்காசிய பகுதியில் பதற்ற நிலை தொற்றியுள்ளது. இந்த சூழலில், சவுதி அரேபியாவுக்கான இண்டிகோ நிறுவனங்களின் விமான சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இண்டிகோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகருக்கான தனது விமான சேவைகளை அக். 31-ந்தேதி வரை ரத்து நீட்டிப்பு செய்துள்ளது. மேலும், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளும் அக். 27 வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

பயணிகளுக்கு இண்டிகோ விடுத்துள்ள அறிவுறுத்தல்

விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு, முன்பதிவின் போது வழங்கப்பட்ட தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் வழியாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்து வருகிறது. பயணிகள் தங்களது இருப்பிடங்களில் இருந்து புறப்படும் முன்பாக, விமானத்தின் தற்போதைய நிலையை (Flight Status) இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா கட்டுப்பாடு

மற்றொரு முன்னணி நிறுவனமான ஆகாசா ஏர், ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகளை அக்டோபர் 27 வரை ரத்து செய்துள்ளது. இதேபோல், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் தங்களின் விமான சேவைகளை அக்டோபர் 24 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. நிலவும் பாதுகாப்பு சூழலைப் பொறுத்து இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT