தேசிய செய்திகள்

ஜி- 20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி - வெளியுறவுத்துறை தகவல்

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜப்பானின் ஒசாக்கா நகரில் வருகிற 28, 29ந் தேதிகளில் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி - 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி- 20 நாடுகளின் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்ற பிரதமர் பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் ஜூன் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

SCROLL FOR NEXT