தேசிய செய்திகள்

அயல்நாடுகளின் நிவாரணம் பகிர்வு விவகாரம் - மத்திய அரசு விளக்கம்

உலக நாடுகளில் இருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

இந்நிலையில், உலக நாடுகளில் இருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை 17.35 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில் தமிழகத்துக்கு மட்டும் 72 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதில்,3.98 சதவீதம் வீணாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 65.90 லட்சம் தடுப்பூசிகளில்,தற்போது 6,13,662 டோஸ் கையிருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT