தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிடோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமா அடல் பிகாரி வாஜ்பாயின் 97-ஆவது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, ஓம் பிர்லா, பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT