புதுடெல்லி,
வங்காளதேசத்துக்கான இந்திய தூதராக இருந்த பிரணய் வர்மா, சமீபத்தில் பெல்ஜியம் மற் றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து வங்காளதேசத்துக்கான புதிய தூதராக முன்னாள் மத்திய மந்திரி தினேஷ் திரிவேதி (வயது 75) நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த திரிவேதி ஐக்கிய முற்போக்கு கூடடணி ஆட்சியில் ரெயில்வே மந்திரியாகவும், சுகாதாரத்துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார். மேலும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஏற்கனவே நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.
வங்காளதேசத்துடனான இந்திய உறவுகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு அமைந் துள்ள புதிய அரசு இந்தியாவுடன் உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறது. இதற்கு திரிவேதியின் அனுபவம் உதவும் என்ற நம்பிக்கையில் இந்த நியமனம் இருக்கும் என மத்திய அரசு வட்டா ரங்கள் தெரிவித்தன. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாக வில்லை.