தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி கே.பி.உன்னி கிருஷ்ணன் மறைவு: பினராயி விஜயன் இரங்கல்

இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக உன்னிகிருஷ்ணன் இருந்தார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவின் மூத்த அரசியல்வதிகளில் ஒருவரான கங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி கே.பி. உன்னி கிருஷ்ணன் (வயது 89) கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1971 முதல் 1996 வரை, கேரள மாநிலம் வடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை மக்களவை உறுப்பினராக (MP) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1989-90ல் வி.பி. சிங் தலைமையிலான அமைச்சரவையில், மத்திய மேற்பரப்பு போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார்.

வளைகுடா போரின்போது (Gulf War) குவைத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் கே.பி.உன்னிகிருஷ்னன் அவர்களின் மிக திறமையாகவும் துரிதமாகவும் செயல்பட்டார்.

அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகையாளராகப் பணியாற்றி உள்ளார் உன்னிகிருஷ்ணன், இவர் முதற்கட்ட அரசியல் பயணத்தை வடகராவிலிருந்து 1971 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் 1977, 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் முக்கிய பதவிகளில் வகித்து இருந்தார்.

1981 மற்றும் 1984 க்கு இடையில், அவர் நாடாளுமன்றத்தில் மதச்சார்பற்ற காங்கிரஸ்தலைவராகவும், 1980 முதல் 1982 வரை பொதுக் கணக்குக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றினார்.

செப்டம்பர் 20, 1936 இல் பிறந்த கே.பி. உண்ணிகிருஷ்ணன், சென்னை சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். அந்த காலகட்டத்தில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் சோர்ந்தார். 1960களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த கே.பி. உன்னிகிருஷ்ணன் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக 1962 -ல் பதவிவகிதார்.

இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தாக உன்னிகிருஷ்ணன் நெருங்கிய ஆதரவாளரான வி.கே. கிருஷ்ண மேனனின் தெரிவித்துள்ளார். பின்னர் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் காங்கிரசிலிருந்து வெளியேறினார். பின்னார் "சொசைட்டி காங்கிரஸ்" கட்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், இறுதியாக மீண்டும் காங்கிரஸில் 1995-ல் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

அவரது மறைவுக்கு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.