தேசிய செய்திகள்

மணிப்பூரில் 4 பேர் படுகொலை: மியான்மர் கும்பல் வெறிச்செயல்; முதல்-மந்திரி கண்டனம்

நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 24 மணிநேர கடையடைப்பும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இம்பால்

மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி குழுவினர் மணிப்பூரில் புகுந்து 4 பேரை படுகொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

இந்தோ-மியான்மர் எல்லை பகுதியில் மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் பிலாங் கிராமத்தில் அண்டை நாடான மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி குழுவினர் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்கள் கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

நேற்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்ச்சியாக, 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த அவர்கள், நாகா சமூகத்தினர் ஆவர்.

முதல்-மந்திரி இரங்கல்

இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அதனுடன், உபா சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி யம்னம் கெம்சந்த் சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக நாகா சமூகத்தினர் தரப்பில், நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 24 மணிநேர கடையடைப்பும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT