தேசிய செய்திகள்

பீகாரீல் சோகம்: டெம்போ மீது வேன் மோதி 4 பேர் பலி

விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு டெம்போவில் சொந்த ஊர் சென்றுகொண்டிருந்தனர்.

விபத்து

சுகாலி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த வேன் மீது டெம்போ நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.