விஜயவாடா,
மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச ஏ.சி. பஸ் திட்டமும் அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு பட்டாபிஷேகம் திட்டத்தின் கீழ் 26,401 ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம். மத்திய அரசின் ஒத்துழைப்போடு நம்முடைய ஆட்சி வெற்றி நடைபோடுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி உள்ளோம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச ஏ.சி. பஸ் திட்டமும் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.