தேசிய செய்திகள்

எரிபொருள் சிக்கனம்: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த டெல்லி முதல்-மந்திரி

எரிபொருளை சேமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

மேற்காசிய போரால் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பேசும்போது, நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

மெட்ரோ ரெயிலில் பயணம்

மேலும் இந்திய பொருளாதாரம் வலுப்படுவதற்காகவும், அந்திய செலாவணி இருப்பை பாதுகாக்கும் நோக்கிலும் வீட்டில் இருந்து பணிபுரிதல், தங்கம் வாங்க வேண்டாம், எரிபொருள் நுகர்வை குறையுங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை குறித்து பிரதமர் பேசினார்.

பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நடக்கும் வகையில் ஒரு பகுதியாக, நேற்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். முதல்-மந்திரி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது பொது மக்களிடைய வியப்பை ஏற்படுத்தியது.

எரிபொருளைச் சேமிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT