தேசிய செய்திகள்

எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க முடியாது- மத்திய மந்திரி சுரேஷ் கோபி

உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மட்டும் உடனடியாக விலையை திரும்ப பெற முடியாது என்று சுரேஷ் கோபி கூறினார்.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாதுறைக்கான மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி கேரளம் மாநிலத்தில் உள்ள தனது திருச்சூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல் விலை சரியுமா

மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதில் இருந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு அந்த பாதிப்பை ஓரளவுக்கு தாங்கிக்கொண்டது. இதன் மூலம், மத்திய அரசுக்கு ₹12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. எரிபொருள் விலை லிட்டருக்கு ₹3.94 அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மட்டும் உடனடியாக விலையை திரும்ப பெற முடியாது. மலிவான கச்சா எண்ணெயை ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு நேரம் எடுக்கும். இயல்பு நிலை திரும்பவேண்டும். கேரளத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது சந்தையில் பொருட்கள் வாங்குவது போல செய்ய முடியாது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்காக மாநில அரசு அடையாளம் கண்டுள்ள இடங்களை இந்த விவகாரத்தைகையாளும் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

தேசிய கல்விகொள்கை

தேசிய கல்விக்கொள்கை திட்டத்தை செயல்படுத்துவதில் ஏதேனும் அரசியல் இருந்தால், அது விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். இந்த சர்ச்சை மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடாது. முதல்-மந்திரி வி.டி.சதீசன் மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந் தால் அது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரளம் அரசும் இதில் கையெழுத்திட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.