லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனுடன் அந்த இளம்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுவன், இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இளம்பெண் வீட்டுக்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மேலும் 2 சிறுவர்கள் என 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து தாத்தா-பாட்டியின் உதவியுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.