தேசிய செய்திகள்

மத்தியபிரதேசம்: ரூ. 4.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் - 2 பேர் கைது

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போபால்,

மத்தியபிரதேசம்: ரூ. 4.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல்

ஒடிசாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்தியபிரதேச போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, லாரி ஒன்றை மறித்து சோதனை செய்ததில் அதில் 871 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த தரம்வீர், விக்ரம் ஆகிய இருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 4.30 கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT