தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கருட சேவை: குவியும் பக்தர்கள்

திருப்பதியில் நாளை மறுநாள் இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை பவுர்ணமி கருட சேவை நடக்கிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடைபெறுவது வழக்கம். உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி, பவுர்ணமி தினமான (புரட்டாசி பவுர்ணமி) இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT