தேசிய செய்திகள்

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடம்

கவுதம் அதானி​யின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்​டும் 8.1 பில்​லியன் டாலர்​கள் அதி​கரித்​துள்​ளது.

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம் |பிடித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ரூ.8.5 லட்சம் கோடியாக உயர்ந்ததால் அம்பானி 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கவுதம் அதானி உலக அளவில் அவர் 19-வது இடத்​தை பெற்​றுள்​ளார். அதே நேரத்​தில் முகேஷ் அம்​பானி​யின் சொத்து மதிப்பு 90.8 பில்​லியன் டால​ராக உள்​ளது. இதனால் அவர் ஆசி​யா​வில் 2-வது இடத்​தி​லும், உலக அளவில் 20-வது இடத்​துக்​கும் சரிந்​துள்​ளார். இரு​வருக்​கும் இடையே உள்ள வித்​தி​யாசம் மிகக் குறைவு என்​றாலும், இந்த மாற்​றம் சந்​தை​யின் தாக்​கத்தை தெளி​வாக காட்​டி​யுள்​ளது. கவுதம் அதானி​யின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்​டும் 8.1 பில்​லியன் டாலர்​கள் அதி​கரித்​துள்​ளது.