தேசிய செய்திகள்

உங்கள் மூளையை மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் மம்தா பாணர்ஜிக்கு திரிபுரா முதல்-மந்திரி பதிலடி

உங்கள் மூளையை மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் என்று மம்தா பாணர்ஜிக்கு திரிபுரா முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேபு கூறியுள்ளார். #MamataBanerjee

அகர்தலா,

திரிபுரா சட்டசபையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி ஆகியவை 43 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிபுராவின் புதிய முதல்-மந்திரியாக பிப்லாப் குமார் தேபு பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றது குறித்து மம்தா பாணர்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த மம்தா பாணர்ஜி, நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் சப்ரான் கட்சியுடன் ஒப்பிட்டு பாருங்கள். திரிபுராவில் பாஜகவின் வெற்றி அவர்களுடையது இல்லை எனக்கூறினார்.

இதற்கு பதில் அளித்த பிப்லாப் குமார் தேபு, உங்கள் மூளையை மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும். மன அமைதிக்காக கோயிலுக்கு சென்று வாருங்கள் எனக்கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT