6 வயது சிறுமி 
தேசிய செய்திகள்

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவன் சுட்டுக்கொலை

போலீசார் பல்ராஜை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்த கத்தியை மீட்க முயன்றனர்.

நொய்டா,

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார். சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றமடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில'. இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனடியாக சிறுமியைத் தேடும் பணியைத்தொடங்கினர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின்பதிவுகளை ஆய்வுசெய்தபோது, முக்கிய சி.சி.டி.வி. காட்சிகளல், தில்பட்டா கிராமத்தைச் சேர்ந்த பல்ராஜ் என்பவர் சிறுமியை அழைத்துச்செல்வதும், பின்னர் சாக்குமூட்டையை எடுத்துக்கொண்டு அந்த நபர் வயல்வெளியை நோக்கிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து பல்ராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதன் தொடர்ச்சியாக வயல்வெளியில் போலீசார் தீவிரமாக தேடிய போது அங்கு சாக்குமூட்டைக்குள் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் விசார தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே, சிறுமி கற்பழிக்கப்பட்டுகொலை செய்யப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான காரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் போலீஸ் காவலில் இருந்த பல்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போத", சிறுமியை கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட பல்ராஜ். கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை பார்க் போலீஸ் சோதனைச்சாவடி அருகே உள்ள பசுமைப்பகுதியில் மறைத்துவைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து போலீசார் பல்ராஜை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்த கத்தியை மீட்க முயன்றனர். அப்போது புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பல்ராஜ் எடுத்ததாகவும், அதை வைத்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தத்துப்பாக்கி சூட்டில் தலைமை காவலர் ரவி குமார் காயமடைந்தார்.இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் பல்ராஜ் உடலில் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல்ராஜ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

என்கவுண்டர் தாக்குதலின் போது படுகாயமடைந்த காவலர் ரவிகுமாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்ராஜ் வைத்திருந்த சட்ட விரோதமான 32 ரக துப் பாக்கி, 3 காலி தோட்டாக்கள்மற்றும் பயன்படுத்தாத தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப் பட்டநபரின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் சிறுமியின் உடல் மருத்துவர்கள் அடங்கிய குழுவால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் பரிசோதனை வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. சிறுமியின் மரணத்துக்கான காரணம', அவருக்கு நேர்ந்த கொடுமை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில', வீட்டின் அருகே மசூதி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பல்ராஜ் அழைத்துச் சென்று கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.