தேசிய செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழா: புத்தாக்க நிறுவனங்களுக்கு அழைப்பு

அனிமேஷன், வி.எப்.எக்ஸ், கேமிங் மற்றும் அடுத்த தலைமுறை மீடியா தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சர்வதேச திரைப்பட விழாவின் 'வேவ்ஸ் பஜார்' கண்காட்சியில் பங்கேற்க திரைத்துறை தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் 'வேவ்ஸ் பஜார்' கண்காட்சியில் பங்கேற்க திரைத்துறை தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது. வரும் 20-ந்தேதி தொடங்கி அடுத்த 8 நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் பங்கேற்ற மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஊடக மற்றும் திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேஷன், வி.எப்.எக்ஸ், கேமிங் மற்றும் அடுத்த தலைமுறை மீடியா தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுடைய நிறுவனங்கள் தங்களது விவரங் களை Wavex-mib@gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

DPIITஅமைப்பில் பதிவு செய்துள்ள திரைப்படத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் WaveX அமைப்பால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.

எப்போது நடைபெறுகிறது?

கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி உள்ளிட்ட துறைகளில் புதுமைகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் WaveX திட்டம் செயல்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT