பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. அங்கு உதவி மேலாளராக கிரண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2 கிலோ 783 கிராம் தங்க நகைகள் திருட்டுப்போய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கிரண்குமார் நகைகளை திருடி, நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்ததுடன் விற்பனையும் செய்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.