தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் கார் மீது மோதிய சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து!

ரெயில்வே கடவுப்பாதையைக் கடக்க முயன்ற கார் மீது மோதி சரக்கு ரெயில் தடம் புரண்டது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் உள்ளதாமோ தர்பள்ளத்தாக்கு அனல்மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் சென்ற சரக்கு ரெயில் மெதுவாக பின்புறமாகவே திரும்பிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கடவுப்பாதை வழியாக கார் ஒன்று கடந்து செல்ல முயன்றது.

இதைப் பார்த்ததும் ரெயில் ஓட்டுநர் ரெயிலை நிறுத்த முயன்றார். எனினும், ரெயில் கார் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச்சென்ற பிறகே நின்றது. இதில் சரக்கு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. கார் கடுமையாக சேதமடைந்தது. காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார்.

அதிருஷ்டவசமாக அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே உயரதி காரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ரெயில் வரும்போது 'கேட்' மூடப்படாமல் இருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.