தேசிய செய்திகள்

இஸ்ரோவுடன் இணையும் சர்வதேச விண்வெளி திட்டத்தில் அரசு பள்ளி மாணவி தேர்வு

இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 பேரில் ஆந்திராவை சேர்ந்த ஜெஸ்ஸியும் ஒருவர்.

நகரி,

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே தவளேஸ்வரத்தை சேர்ந்தவர் ஜெஸ்ஸி (வயது 14). அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தனியார் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நடத்தும் சர்வதேச திட்டத்தில் இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் 108 நாடுகளில் இருந்து 1,200 மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 பேரில் ஆந்திராவை சேர்ந்த ஜெஸ்ஸியும் ஒருவர்.

செயற்கைக்கோள்

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் சார்பாக 'மிஷன் சக்தி சாட்' என்ற குட்டி செயற்கைக்கோள்களை உருவாக்கும் இளம் அணியில் ஜெஸ்சி இடம்பெறுகிறார்.

இதுகுறித்து அவர், "அரசு பள்ளி மாணவியாக நான் இதில் தேர்வாவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. எதிர்காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.