அதன்படி தமிழகத்தின் கன்னியாகுமரி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், ராஜஸ்தானின் அஜ்மீர், பீகானேர் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுவதாக கூறினார். இதற்கான ஒப்புதலை கலாசார அமைச்சகம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (என்.சி.எஸ்.எம்.), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து 22 அறிவியல் மையங்கள் அமைத்துள்ளதாகவும், அவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 25 அறிவியல் அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.