புதுடெல்லி,
இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டையே சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்து உள்ளது என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசிஉள்ளார்.
முழுமையாக தனிநபர் உரிமையானது கொடுக்க முடியாது, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான் என கூறிஉள்ளது என ரவிசங்கர் பிரசாத் சுட்டிக் காட்டிஉள்ளார்.
மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஆதார் மசோதாவை கொண்டுவந்த போது கூறியதையே, சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்து உள்ளது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தனிநபர் உரிமையானது அடிப்படையான உரிமையாகும், என கூறிஉள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் முடிவானது பாசிச படைகளுக்கு பெரிய அடியாகும். கண்காணிப்பு மூலமான அடக்குமுறை என்ற பாரதீய ஜனதாவின் கொள்கையை நிராகரிக்கும் ஒலியாகும், என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது தொடர்பாக டுவிட்டரில் பதிலளித்து உள்ள ரவிசங்கர் பிரசாத்,
நெருக்கடி நிலையின் போது தனிப்பட்ட சுதந்திரங்களை பாதுகாத்தலில் காங்கிரஸ் சாதனை படைத்து உள்ளது என விமர்சனம் செய்து உள்ளது.
ஆதாரை அடையாள அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் விசாரணையை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு, இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என தீர்ப்பு வழங்கி உள்ளது.