புதுடெல்லி,
12-வது சர்வதேச யோகா தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆரோக்கியமான முதுமைக்கு யோகா' என்ற கருப்பொருளில் விழா கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா சங்கம் சார்பாக பிரதமர் மோடியுடன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா நிகழ்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் பங்கேற்பாளர்கள் திரட்டப்பட்டு வருகின்றனர். இதற்காக அமைப்புகள், நிறுவனங்கள் yoga.ayush.gov. ர் in yoga-sangam என்ற இணையதளத்தில் தங்களது யோகா சங்கம் நிகழ்வுகளை பதிவு செய்யுமாறு ஆயுஷ் அமைச்சகம்' அழைப்பு விடுத்திருந்தது.
இதையொட்டி இணைய தளத்தில் பதிவுகள் அதிகரித்து உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்கள், பிரதமர் தலைமையிலான யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றன.
இந்தியா முழுவதும் 778 மாவட்டங்களை உள்ளடக்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் பல்வேறு அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இந்த பதிவுகளில், 3.22 லட்சத்திற்கும் மேற்பட்ட 2 அரசு நிறுவனங்கள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 44 ஆயிரம் அமைப்புகள் பங்கேற்றுள்ளன.
மேற்கு வங்காளத்தில் இருந்து அதிகபட்சமாக 2.76 லட்சத்திற்கும் அதிகமான அமைப்பு, நிறுவனங்கள் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 1.50 லட்சம் பதிவுகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. மராட்டி யம், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இந்த இணையதளத்தில் அதிகபட்சமாக செய்துள்ளன.