தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் 3-வது முறையாக ரூ.2 லட்சம் கோடியை கடந்த ஜி.எஸ்.டி. வசூல்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வசூல் கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 15 சதவீதம் அதிகரித்து ரூ.2.04 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூ.2 லட்சம் கோடி

நடப்பு நிதியாண்டில் 3-வது முறையாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்துள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் ரூ.2.43 லட்சம் கோடியும், ஜூலை மாதத்தில் ரூ.2.11 லட்சம் கோடியும் ஜி.எஸ்.டி. வசூலாகி இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 11.60 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.12.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாய் 10.10 சதவீதம் அதிகரித்து ரூ.1.38 லட்சம் கோடியாக இருந்தது. இறக்குமதி வாயிலான வருவாய் 26 சதவீதம் உயர்ந்து ரூ.65,525 கோடியாக உள்ளது.

தமிழகத்தில் 5 சதவீதம் சரிவு

இதற்கிடையே, தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வசூல் சரிந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் ரூ.10,670 கோடி ஜி.எஸ்.டி. வசூலானது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்து ரூ.10,188 கோடியாக இருந்தது.

SCROLL FOR NEXT