புதுடெல்லி,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2026 மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் மத்திய ஜி. எஸ்.டி.யாக ரூ.37,397 கோடி கிடைத்துள்ளது. மாநில ஜி.எஸ்.டியாக ரூ.45,143 கோடியாகவும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்டி ரூ.51,990 கோடியாகவும் உள்ளது.
மே மாத ஜி.எஸ்.டி. ரூ.1.34 லட்சம் கோடியையும் சேர்த்து கடந்த 2 மாதங்களில் ரூ.4.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு (2025) மே மாதம் ஜி. எஸ்.டி வசூல் ரூ.1.88 லட்சம் கோடியாக இருந்தது தற்போது 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.