தேசிய செய்திகள்

அக்டோபரில் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்... நிகர வசூல் ரூ.2.03 லட்சம் கோடி!

தமிழகத்திற்கான வரி வருவாயும் அதிகரித்துள்ளது.

புது டெல்லி,

நாட்டின் அக்டோபர் மாத மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.2,31,290 கோடியாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,31,290 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 22.9 சதவீதம் அதிகமாகும்.

நிகர ஜிஎஸ்டி வசூல்

அக்டோபர் மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,03,356 கோடியாக உள்ளது. மொத்த வசூலில் இருந்து திரும்ப வழங்கப்பட்ட வரித் தொகையைக் கழித்த பிறகு இந்த நிகர வசூல் கணக்கிடப்படுகிறது.

தமிழகத்துக்கு ரூ.7,460 கோடி!

இதற்கிடையே, அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்காக ரூ.7,460 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலும், தமிழகத்திற்கான வரி வருவாயும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT