தேசிய செய்திகள்

குஜராத்: ரசாயன ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி

வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் வாக்ரா தாலுக்காவில் உள்ள சாய்கா ஜிஐடிசி பகுதியில் ரசாயன ஆலை அமைந்துள்ளது. இங்கு மருந்துக்கான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஹைட்ரஜனேற்றம் செய்யும் செயல்முறையின் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ரியாக்டர் வெடித்துச்சிதறியதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்தின்போது மெத்திலீன் டைகுளோரைடு (எம்டிசி) என்ற நச்சு வாயு கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த உடனடியாக குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், DISH மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT