தேசிய செய்திகள்

குஜராத்: கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் வர்தேஜ் நகரில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானத்தின் போலி பாட்டில்களில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 8 பேர் பலியாகி இருந்தனர். இதுதொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 10 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.