காந்தி நகர்,
குஜராத்தில் லாரி - கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராணுவ குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் காரில் ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், குஜராத்தின் பஜ் - ஹவ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 7 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.