காந்தி நகர்,
மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் அடாஜன் பகுதியை சேர்ந்த இளம்பெண் சிம்ரன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். ரூபாய் தாளில் உள்ள காந்தியின் புகைப்படத்தை காட்டி ஆபாசமான செய்கையுடன் அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஸ்டாகிராம் பிரபலம் சிம்ரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.