தேசிய செய்திகள்

2 பயங்கரவாத குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள தவுடைஜாங் கிராமத்தில் இரு பயங்கரவாத குழுக்களுக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மணிப்பூர்,

மணிப்பூர் மாநிலம், நோனி மாவட்டத்தில் 2 பயங்கரவாத குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

2 பயங்கரவாத குழுக்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள தவுடைஜாங் கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இரு பயங்கரவாத குழுக்களுக்கு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. அதாவது நாகா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரு பிரிவினர் இந்த மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

3 பேர் சுட்டுக்கொலை

இருதரப்பினரும் மாற்றி மாற்றி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில், 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டனர். மேலும் வன்முறை பரவாமல் தடுக்க, அப்பகுதி பெண்கள் திரண்டு சென்று ஒலிபெருக்கி மூலம் துப்பாக்கிச்சூட்டை நிறுத்துமாறு இருதரப்பிற்கும் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT