தேசிய செய்திகள்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஜிம் பயிற்சியாளர்... செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் - அதிர்ச்சி சம்பவம்

செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

மும்பை,

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, மதமாற்றத்தில் ஈடுபட முயன்ற ஜிம் பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.

ஜிம் பயிற்சியாளர்

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நலசபுரா பகுதியில் ஜிம் செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம்மில் பயிற்சியாளராக ஆரிப் ஆயூப் ஷேக் (வயது 22) என்ற இளைஞர் செயல்பட்டு வந்தார். இவர் ஜிம்மில் உடற்பயிற்சி அளிக்கும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் ஆரிப் ஷேக்கிற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதள பக்கங்களில் அதிக பாலோயர்கள் உள்ளனர்.

இதனிடையே, ஆரிப் ஷேக்கிற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அப்பெண்ணுடன் நெருக்கமாக பழகிய ஆரிப் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கடந்த ஓராண்டாக பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மத மாற்றம்

பின்னர் தன்னை திருமணம் செய்யுமாறு இளம்பெண் ஆரிப் இடம் கூறியுள்ளார். அப்போது, இந்து மதத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறும்மாறு ஆரிப் கூறியுள்ளார். இளம்பெண்ணின் தாயார் ரக்‌ஷனாவையும் மதம் மாறும்மாறு ஆரிப் கூறியுள்ளார். மேலும், இளம்பெண்ணை உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

கைது

இதையடுத்து, திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மதம் மாற வற்புறுத்திய ஜிம் பயிற்சியாளர் ஆரிப் ஷேக் மீது பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன் தினம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிம் பயிற்சியாளர் ஆரிப்பை கைது செய்தனர். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

செல்போனில் ஆபாச வீடியோக்கள்

ஜிம் பயிற்சியாளர் ஆரிப் ஷேக் இந்து மதத்தை சேர்ந்த பல பெண்களை குறிவைத்து அவர்களிடம் பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோக்களை வெளிநாடுகளில் செயல்படும் ஆபாச வலைதளங்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரணையில் ஆரிப் ஷேக்கின் செல்போனில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், பெண்களை மத மாற்றம் செய்யும் முயற்சியிலும் ஆரிப் ஷேக் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்து மதப்பண்டிகையான நவராத்திரி பண்டிகை குறித்து அவதூறு கருத்துகளை ஆரிப் ஷேக் தெரிவித்த நிலையில் அவர் மீது நலசபுரா போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆரிப் ஷேக் செய்யப்பட்டுள்ளார். மேலும், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து வெளிநாட்டு ஆபாச செயலிகளுக்கு ஆரிப் ஷேக் விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜிம் பயிற்சியாளரான இன்ஸ்டா பிரபலம் ஆரிப் ஷேக் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள நிலையில் அவர் ’லவ் ஜிகாத்’ செயலில் ஈடுபட்டு வந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

SCROLL FOR NEXT