தேசிய செய்திகள்

பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த நிலையில் மக்கள் தங்கம் வாங்குவது குறைந்ததா?

சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பெங்களூரு,

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாலும், ரூபாய் மீதான மதிப்பு குறைந்து இருப்பதாலும் பிரதமர் மோடி மக்களி டம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் இன்னும் ஒரு ஆண்டுக்கு தங்க நகைகளை மக்கள் வாங்க வேண்டாம் என்றும், அதுபோல் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தும்படியும் கோரிக்கை விடுத்தார். பிரதமர் விடுத்த கோரிக் கையை பா.ஜனதாவினர் வழிமொழிந்து வருகிறார்கள். அதன்படி பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் மோகம் மக்களிடம் 50 சதவீதம் அளவில் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதுபோல் சொந்த வாகனங்களை பயன்படுத்து வதை குறைத்து, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் தலா 150 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோலும், டீசலும் மிச்சமாவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பா.ஜனதாவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபற்றிய தகவல்களை நகைக்கடை உரிமையாளர்களும், தங்க நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.