புதுடெல்லி
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவின் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் 6 முதல் 7 நாட்களுக்கு தொடர்ந்து வெப்ப அலை சூழல் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப், அரியானா, என்.சி.ஆர்.-டெல்லி பகுதி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், விதர்பா, கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு 6 முதல் 7 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்படுகிறது.
கிழக்கு உத்தர பிரதேசம், கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் விதர்பாவின் சில பகுதிகளில் 3 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வெப்ப அலையானது ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் தொடங்கும் என்றும் இமாசல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் இன்று முழுவதும் வெப்ப அலை இருக்கும் என்றும் அதன்பின்னர் குறைய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.