தேசிய செய்திகள்

‘மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுங்கள்’ - காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு காங்கிரசாருக்கு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைத்து கவலையடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சென்றடைந்து, நிவாரணப் பணிகளில் உதவுமாறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். முதியவர்கள் மற்றும் நலிவடைந்தோர்க்குச் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுங்கள்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT