தேவனஹள்ளி,
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள், அவர்களது உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி னார்கள். அப்போது தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் வந்திறங் கிய 2 பயணிகளை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
மேலும் அவர்கள் வைத்திருந்த உடைமைகளில் நடத்திய சோதனையில் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 2 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ 140 கிராம் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 54 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான 2 பயணிகள் மீதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக சுங்கத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.