பாதுகாக்கப்பட்ட மண்டலம்
மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் நோக்கத்தில் அதனை ஆராய கஸ் தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதில் அந்த மலையை பாதுகாக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதன்படி கர்நாடகம், கேரளம், தமிழகம், மராட்டியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி 56 ஆயிரத்து 665 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
கர்நாடகத்தில் 10 மாவட்டங்களில் 20 ஆயிரத்து 668 சதுர கிலோ மீட்டர் பரப்ப ளவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு முதல் வரைவு அரசாணையை கடந்த 2014-ம் ஆண்டு பிறப்பித்தது. இதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இது ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு 7-வது முறையாக வரைவு அரசாணையை பிறப்பித்தது. அந்த குழுவின் பரிந்து ரைப்படி கர்நாடகத்தில் 1,449 கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அந்த அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் கள ஆய்வு மேற் கொள்ள வேண்டியுள்ளதால் இறுதி அரசாணை வெளியிடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டது. மேலும் கள ஆய்வு நடத்த ஒரு குழு அமைக்கவும் சட்டசபையில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு கர்நாடக அரசு நீதிபதி ஜான்மைக் கேல் குன்கா தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள் ளது. இந்த குழுவில் உறுப்பினர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ' குழுவினர் கஸ்தூரிரங்கன் குழுவை ஆராய்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை பாது காக்கப்பட்ட மண்டல பரப்பை குறைக்க தேவையான பரிந்துரையை வழங்கு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் கருத்துகளை கேட்கவும், கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி கிராம பஞ்சாயத்து தலை வர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் தாங்கள் சேகரிக்கும் கருத்துகளை உயர்மட்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.