தேசிய செய்திகள்

ஜிமிக்கி கம்மல் நடனமாடிய முஸ்லிம் பெண்கள் குறித்து விமர்சனம் வழக்கு பதிவு செய்ய உத்தரவு

நடுரோட்டில், 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு எதிராக , கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்ய உத்தரவு

திருவனந்தபுரம்

கேரள மாநிலம், மலப்புரம் நகரின் பரபரப்பான சாலை சந்திப்பில் கடந்த 1 ந்தேதி மூன்று முஸ்லீம் பெண்கள் ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடினர்.

அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள்.

உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர். ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக் கொண்டு நடனமாடியது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது எனக்கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையாக அவதூறு விமர்சனம் எழுந்தது. அவர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், '' மூன்று பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது கேரள கலாச்சாரத்திற்கு எதிரானது. இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

SCROLL FOR NEXT