தேசிய செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்த புதுமணத் தம்பதி கைது

கைது செய்யப்பட்ட புதுமணத் தம்பதியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

சிம்லா,

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லா மாவட்டம் சுந்தர்நகர் பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் ஓட்டலில் தங்கி இருந்த புதுமணத் தம்பதி போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புதுமணத் தம்பதியை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 21 கிராம் போதைப்பொருளையும் , ரூ. 20 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

புதுமணத் தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மண்டி மாவட்டத்தை சேர்ந்த அருண் பாட்தி , பெர்ல் என்பதும், இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட புதுமணத் தம்பதியை போலீசார் சிறையில் அடைத்தனர்.