தேசிய செய்திகள்

இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்

வானிலை மையத்தின் முதன்மை மொழி இந்திக்கு மாற்றப்பட்டு உள்ள இந்த திடீர் நிகழ்வு தென் மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து அவ்வப்போது எதிர்கட்சிகள் சார்பில் குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் திட்டங்கள், மற்றும் வலைதளங்களில் இந்தி மொழியில் மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முதன்மை மொழி இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முதன்மை மொழி இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இந்த இணையதளத்தின் முதன்மை மொழியாக ஆங்கிலம் இருந்த நிலையில், தற்போது இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, முதலில் இணையதளத்தின் உள்ளே செல்லும்போது. இந்தியில் இருக்கும். அதன்பிறகு தேவைப்பட்டால் ஆங்கிலத்தில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. வானிலை மையத்தின் முதன்மை மொழி இந்திக்கு மாற்றப்பட்டு உள்ள இந்த திடீர் நிகழ்வு தென் மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.