கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ,

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல், தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.10.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT