தேசிய செய்திகள்

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஊர்க்காவல் படை வீரர் டிஸ்மிஸ்

அரியாங்குப்பம் போலிசார் ஊர்க்காவல் படை வீரர் அனீஷ்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

பாலியல் தொல்லை

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அனிஷ்குமார் (வயது 23)., ஊர்க்காவல் படை வீரர். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஊர்க்காவல் படை வீரர் பணியில் சோர்ந்தார். தற்போது புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரியாங்குப்பம் போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போக்சோ

இதன் பேரில் அரியாங்குப்பம் போலிசார் ஊர்க்காவல் படை வீரர் அனீஷ்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அனீஷ்குமார் தலைமறைவார். அவரை அரியாங்குப்பம் போலீசார் தேடி வருகின்றனர்.

டிஸ்மிஸ்

இந்த நிலையில் அனீஷ்குமார் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. விசாரணை அறிக்கை போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை யடுத்து ஊர்க்காவல்படை வீரர் அளிஷ்குமாரை டிஸ்மிஸ் செய்து புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.