காந்தி நகர்,
உள்துறை மந்திரி அமித்ஷா நாளை குஜராத் செல்ல உள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை குஜராத் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் குஜராத் செல்லும் அமித்ஷா அம்மாநிலத்தின் வேத்நகருக்கு செல்கிறார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் மற்றும் அவர் 25 ஆண்டுகள் அரசு பதவிகளில் (முதல்-மந்திரி, பிரதமர்) இருப்பதை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் பைக் யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேத்நகரில் இருந்து வாரணாசி வரை நடைபெறும் இந்த பைக் யாத்திரையை நாளை அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.