போபால்,
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது தாத்தா. இவர் விவசாயம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு விவசாய பணிகளை முடித்து விட்டு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.
அந்தப் பெண் திடீரென தாத்தாவின் பைக்கை கை காட்டி நிறுத்துமாறு கூறி உள்ளார். தனக்குக் காலில் வலி இருப்பதாகவும், நடக்க முடியாமல் உள்ளதால், பைக்கில் லிப்ட் கிடைக்குமா? என்று புன்முறுவலாக கேட்டுள்ளார்.. உடனே இரக்கப்பட்டு அந்தப் இளபெண்ணை பைக்கில் ஏற்றினார் தாத்தா, அவரது வீட்டிலேயே கொண்டு போயும் விட்டுள்ளார். வரும் சம்பவத்தை எதிர்பாராத தாத்தா இளம்பெண்ணின் பேச்சில் மயங்கினார்.
தன்னுடைய வீடு வரை அழைத்து வந்து உதவியதற்கு நன்றி, வீட்டிற்குள் வந்து ஒரு கப் டீ குடித்து விட்டு போலாமே? என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.. தாத்தாவும் ஆசை ஆசையாய் அந்த இளம்பெண்ணின் வீட்டில் நுழைந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்தப் இளம்பெண் முதியவரை உல்லாசத்திற்கு அழைத்து, ஆசை வலைக்குள் வீழ்த்தியுள்ளார். கரும்பு தின்ன கூலியா என்ற பழமொழிக்கு ஏற்ப தாத்தாவும் இளம்பெண்ணின் ஆசை வலையில் வீழ்ந்தார். தாத்தாவிற்கு தெரியாமல் அங்கிருந்த ரகசியக் கேமராக்கள் அனைத்தையும் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.
உல்லாசமாக இருந்த நேரத்தில் திடீரென அந்தப் இளம்பெண்ணின் கூட்டாளிகள் ஒட்டுமொத்தமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, தாத்தாவை சுற்றி வளைத்தனர். வீடியோவை சமூக வலைதளத்தில் போட்டு விட்டு உங்கள் மானத்தை வாங்கி விடுவோம்போலீசில் பாலியல் புகார் கொடுப்போம்" என்று மிரட்டி, அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடுமே என்று பயந்த தாத்த திரு திருவென முழித்தார், முதற்கட்டமாகத் தன்னிடம் இருந்த 5,000 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால், அந்த கும்பல் விடாமல் தொந்தரவு செய்யவே, தனது விவசாய நிலத்தையே விற்க துணிந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த கும்பலின் தொல்லை தாங்க முடியாமல் தாத்தா காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.
விவசாயி கொடுத்த புகாரின் பேரில் களமிறங்கிய போலீசார், பெண் உட்பட அந்த மோசடி கும்பலை அதிரடியாக கைது செய்தனர். அப்போதுதான், கதையே வேறு பாணிக்கு திரும்பியது. வழக்கமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு சிறையில் உடல் நிலை பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் அந்தப் பெண்ணுக்கும் வழக்கமான பரிசோதனை செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாகவே அவர் இதற்காகச் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் ஒரு லேப்டாப் சிக்கியது. அதைத் திறந்து பார்த்த போலீசாருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அதில், அந்த எச்.ஐ.வி பாதித்த பெண்ணுடன் பல ஆண்கள் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அந்தப் பெண் மூலம் அந்த நபர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், வீடியோவில் உள்ள நபர்களைத் தேடிப் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பும் தீவிர முயற்சியில் போலீசார் களம் இறங்கி உள்ளனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எச்.ஐ.வி பாதித்த பெண் ஒருவர் திட்டமிட்டுப் பணம் பறிப்பதற்காகப் பலருக்கு இந்தத் தொற்றைப் பரப்பி வந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தை பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.