தேசிய செய்திகள்

இந்திய குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் அசாதுதீன் ஒவைசி கண்டனம்

தெலுங்கானாவில் பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அசாதுதீன் ஒவைசி எம்பி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலுள்ள இந்திய தனித்துவ அடையாளம் ஆணைய (uidai) அலுவலகத்தால் அந்த நேட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் சட்டவிரேதமாக குடியேறியேருக்கு ஆதார் அளிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதாகவும், இந்நிலையில் பெய் தகவலை அளித்து 127 பேரும் ஆதார் எண் பெற்றிருப்பதாக பேலீசாரிடம் இருந்து அறிக்கை வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 20ம் தேதி நேரில் ஆஜராகி நீங்கள் விளக்கமளிக்கும்படி 127 பேருக்கும் நேட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதற்கும் குடியுரிமைக்கும் சம்பந்தமில்லை, புகார் உறுதியானால் ஆதார் எண் மட்டுமே ரத்து செய்யப்படும் என அந்த ஆணையம் கூறியுள்ளது.

இந்திய தனித்துவ அடையாளம் ஆணைய இந்த செயலுக்கு ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பட்டியலிடப்பட்ட அந்த 127 பேரில் எத்தனை பேர் முஸ்லிம் மற்றும் தலித்? என்று அசாதுதீன் ட்வீட் செய்துள்ளார், ஆதார் ஆணைய தெலுங்கானா காவல்துறையைத் தாக்கி உள்ளார்.

முதலில், குடியுரிமையை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாளம் ஆணையத்துக்கு (UIDAI) அதிகாரம் இல்லை. ஆதார் தவறாக வழங்கப்பட்ட சில வழக்குகளை ஆராய சில அதிகாரங்கள் உள்ளன.

இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை மற்றும் அதன் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது என கூறி உள்ளார்.